Saturday, May 24, 2014

இல்லாதவன்..



இலக்கு நெருங்கியதென 
நினைத்த நொடியில் 
ஒரு சம்மட்டி அடி பிடரியில்  

உற்றுப்பார் 
இலக்கு எங்கே என்றது 
காலம் 

கண்ணுக்கெட்டிய தொலைவில் 
எட்டிப்பிடிக்க முடியா தூரத்தில் 
எக்காளமிட்டது இலக்கு 

இப்படியாவது  
மீண்டுமொரு முறையில் 
மற்றுமொரு முறை 

முன்னெப்போதும் இல்லா சவால்கள்
புதிய முட்பாதைகள் 
ஓடிக்கொண்டே இருப்பதன் தாகம் 

இருப்பதாய் நம்பப்படும் திறமை 
அதிகமாய் சோதிக்கப்படுகிறது 
சோதிக்கப்பட இருக்கிறது 

கடைசி நாளில் 
கடைவழிதான் என்றபோதினும் 
கடைசி வரைக்கும் இந்தவழி மட்டுமே 

ஓடத்துணிந்து விட்டேன் 
இலக்கை அடையும் வரையல்ல 
இல்லாததையெல்லாம் அடையும் வரை 

- முத்துசாமிப் பேரன் 

2 comments:

  1. ஓடத்துணிந்து விட்டேன்
    இலக்கை அடையும் வரையல்ல
    இல்லாததையெல்லாம் அடையும் வரை
    அருமையான முத்தாய்ப்பு! சிறப்பான கவிதை! வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  2. இருப்பதை வைத்துகொண்டு
    ஓடினால்...
    இல்லாததும் கைக்கூடும்...
    இருப்பதும் சிறப்படையும் !

    நல்ல கவிதை நண்பரே, தொடர்ந்து எழுதுங்கள்.

    எனது புதிய பதிவு :முபாரக்
    http://saamaaniyan.blogspot.fr/2014/05/blog-post_28.html

    நன்றி
    சாமானியன்

    ReplyDelete